பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

173


தெல்லாம் நான் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், அமைதிக்குள் அடக்கப் பட்டுள்ளதாகவும் இருக்கிறது அந்தக் கமுக்கம். அதுவே என் விருப்பம்.

-நா

எனது பாடல் உன் கண்களின் கருமணிகளில் கலந்து எந்த செய்தியையும் ஆழமாய் ஊடுருவிப் பார்க்கும் ஆற்றலை உனக்கு அளிக்கும்.

-கா.பா

நாம் வாழ வேண்டும். தன் பாடல்களைப் பொழியும் போது ஒரு பாவலன் எத்தகைய மகிழ்ச்சியை அடைகிறானோ, அந்த மாசற்ற மகிழ்ச்சியை நாம் அடைய வேண்டும்.

-ஆ

மனவுறுதிப் பறவை இன்னும் இருண்ட இரவிலும் பாடுகிறது.

-ப.ப

லியர் பேராசையை விடுக; எளியர் துணிவு கொள்க. இஃதின்றி உலக நட்புறவு வராது.

-தா. சொ

ந்த மாலைப் பொழுதில் நிலவும் அமைதி ஒரு காலடியோசையை எதிர் பார்ப்பதாகத் தோன்றுகிறது. நீயோ என் கண்ணீருக்குக் காரணம் கேட்கிறாய்.

-நா