இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
181
கமுக்க நெஞ்சத்தில் உள்ளது. அது மெதுவாக நாணம் கொள்ளும் காதலின் அரும்புகளாக விரிகிறது.
-க.கொ
★★★★
திடீரென்று என் குரல் உன் நெஞ்சத்தைத் துடிக்கச் செய்து அங்க அசைவுகளை ஏற்படுத்தும், இதை நான் ஒரு பொழுதும் கண்டதில்லையோ?
-நா
★★★★
உன் விருப்பங்களை நிறைவேற்றி வைத்துக் கொள். உன் கட்டளையை ஏற்றி உன் அரசவையில் விருப்பம் போல் நான் நடமாடவேண்டும்.
-க.கொ
★★★★
காதல் தனது துயரமான அமைதியின் மேல் சாயும் பொழுது, இருட்டு ஆற்றங்கரையின் மேல் சாய்கிறது. இந் நிலையில் விண்மீன் கூட்டத்திலிருந்து பறித்து வந்து பாடல்களை என்னருகில் அமர்ந்து பாடச் சொன்னது எது?
-நா
★★★★
இறப்புக் காலத்தில் தனது கட்டுகளை மாந்தன் உடைத்தெறியும் அதே சமயம் கட்டுகளுக்கு அடங்காது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகிறதில்லையா.
க.கொ
★★★★