உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

185


விடியலின் அமைதியில் கோயிலுக்கு இட்டுச் செல்லும் தனித்த சாலை அருகில் தலை தாழ்த்தி மர நிழலில் கீழ் ஓரமாக நான் நிற்கிறேன்.

கா.ப

என்னருமைக் காதலியே, உன்னை என் கண்களுக்குள் மறைத்திருப்பேன், என் மகிழ்ச்சியில் வைரம் போன்று உன்னை இழையிட்டிருப்பேன், என் மார்பின் மேல் அதைத் தவழ விட்டிருப்பேன்.

-நா

என் காதலி வருகையில், என்னருகில் அமர்கையில் இருட்டு மேலும் கறுத்து விடுகிறது, காற்று விளக்கை அணைத்துவிடுகிறது, விண்மீன்கள் மேல் கொண்டல்கள் திரையிடுகின்றன. என் மார்பின் மேல் தவழும் மதாணி ஒளி வீசுகிறது, வெளிச்சம் அளிக்கிறது, அதை எவ்வாறு மறைத்து வைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை.

-தோ

என்னிடம் நீ குறைகள் காணும் பொழுது நான் ஒரு பெண் என்பதை நினைவில் வைத்துக் கொள். நினைந்து நினைந்து பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாய் தெரிகிறது. இந்த உலகில் எனக்கென்று எஞ்சி நிற்பது உனது அன்பு ஒன்றே, உன்னை விட்டு நான் ஒரு கணம் பிரிந்து விட்டால், நான் இறந்து விடுவேன்.

-நா