பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


பறவைகள் தங்கள் கூட்டை விட்டுக் கிளம்பிவிடுவதைப் போல, உன் எண்ணங்கள் உன் கண்களிலிருந்து புறப்பட்டுவிடுகின்றன.

-தோ

பொழுது விடியப் போகிறது என்று இரவு உணர்வதைப் போல், நீ வரப்போகிறாய் என்பதை என் நெஞ்சம் உணர்கிறது.

-நா

கனவுகள் தோன்றாத உறக்கம் போன்று என் ஏரி இருண்டிருக்கிறது. அடி ஆழத்தில் இரவும் பகலும் ஒன்றே: அமைதியே பாடல்களாகின்றன. -தோ குழந்தைகளைஅடைத்துப் போடாமல், மகிழ்ச்சியாக ஒடியாடவிட்டாலே கட்டில்லாமல் உடலும் உள்ளமும் செழித்து வளரும்.

-நினை

அன்பே உலகம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். காரணம் அன்பு தான் உலகைத் தோற்றுவிக்கிறது, காக்கிறது, அதை அதன் மார்பகத்திற்கே இட்டுச்செல்கிறது.

சா

கடல் கொந்தளிக்கும் போது அலைகள் எழுவதைப் போல், என் எண்ணங்கள் கிளர்க்கும் பொழுது, நீ