பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


இருட்டிவிட்டது. விண்மீன்கள் முகில்களில் மறைந்து விட்டன. இலைகளினூடே காற்றுப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. -தோ

என்னைக் கவர்ந்திழுத்த குரல்களை நான் தேடியலைந்தேன். எனினும் தேடுதல் பயனளிக்கவில்லை.

இனி என் அமைதியின் ஆன்மாவில் உனது மொழிகளை அமர்ந்து கேட்கவிடு. -எ

நாம் இருவரும் முதன் முறையாகச் சந்தித்தபோது, என் நெஞ்சம் இசையில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்றும் தொலைவிலேயே இருக்கும் அவள் இனி என்றும் உன்னருகிலேயே தங்கியிருப்பாள். -நா

என் கனவுகளாகிற விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் பொன்மாலை முகில் நீ. -தோ

அன்பின் நேயக் கைகள் போல, என் குழந்தாய்! இந்த என் பாடலானது தன் இசை அலைகளால் உன்னைத் தழுவிக் கொள்ளும். - -வ.பி