இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
199
நீங்காத வறுமை, இருள், அடைப்பு: சோறு வேண்டும்; உயிர்வேண்டும், உடல்நலம் வேண்டும், வலிமை மிக்க தோள்வேண்டும். -நூ.பா
★★★★
அறிய வேண்டாதொன்றை அறிந்து கொள்ளாதே; கிட்டாததைத் தேடிச் செல்லாதே; நிரம்பாத ஒன்றை நிரப்பத்தான் கூடுமோ? - -நூ.பா
★★★★
காளிதாஸ் என்ற பெயரில் எவனோ ஒருத்தன் இருந்தான்; ஆனால் நான் இருக்கிறேனே, உயிர்த் துடிப்புடன் ஓர் ஆள். -நூ.பா
★★★★
எனது அன்பார்வம் விடுதலை உருவில் ஒளிரும்; எனது காதலோ பத்தியின் வடிவாய்ப் பயன் தருமே. -நூ.பா
★★★★
இந்தப் புல், இப்புழுதி, அந்த விண்மீன்கள், ஞாயிறு, திங்கள் இவற்றின் மறைவில் நிற்கும் நீ ஓவியமா? வெறும் ஓவியமா? -நூ.பா
★★★★
வாழ்வு, இளமை, செல்வம், புகழ் யாவும் காலப் பெருக்கில் மறைவன. - -நூ.பா
★★★★