பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

201


விண்ணில் திரியும் வெண்முகிலாய் மாற ஏங்கியது மாமலை மண்ணின் சிறையிலிருந்து மீண்டும் வெளியேற சிறகடித்தது மரமும். -நூ.பா

டுகின்ற நிழல்களிலும் பாடுகின்ற பாடல்களிலும் ஏன் எளிதாக என்னைப் பறிகொடுத்துவிட்டேன். -கீ

என் அன்பே, எனது வாழ்வின் இடையில் ஒளி தாண்டவம் ஆடுகின்றது. அந்த ஒளி எனது வீணையின் கம்பிகளை மீட்டுகிறது, விசும்பு தெரிகிறது, காற்று அலறி ஓடுகிறது, உலகம் உவப்புடன் களி நடம் புரிகிறது. -கீ

என் உள்ளத்தில் உலகம் சொற்களை மாலையாக நெய்கிறது. உனது பெருமகிழ்ச்சி அச்சொற்களுக்கு இசை ஊட்டுகிறது. காதலினால் நீ உன்னையே எனக்கு அளித்துவிடுகிறாய், பின்னர் என்னகத்தே உன் இனிமை முழுவதையும் நிறைந்திருக்கக் காண்கிறாய். -கீ

அல்லும் பகலும் என் நாடி நரம்புகளில் ஒடும் உயிர் ஆறே இந்த உலகின் ஊடும் ஓடிச் பெருகி இசையோடு நடம்புரிகின்றது. -கீ