பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


எல்லாப் பொருள்களும் ஓடிக் கொண்டே இருக்கின்றன, நிற்கவே இல்லை. பின்புறம் திரும்பிப் பார்க்கவில்லை. எந்த ஓர் ஆற்றலும் அவற்றை நிறுத்தவே முடியாது. அவை ஒடிக் கொண்டே இருக்கின்றன. -கீ

நீயும் நானும் இணைந்த காட்சி வானகம் முழுதும் நிறைந்திருக்கிறது . நீயும் நானும் கலந்து பாடும் இன்னிசை காற்றில் குமுறிக் கொண்டு வருகிறது. நாம் ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்துக்கொண்டு அலைவதில் பல ஊழிகள் கழிந்து ஒழிகின்றன. -கீ

பிரிவின் துயரமே வையத்தில் பரவிப் பாய்கிறது. இதுவே எல்லையற்ற வானவெளியில் எண்ணற்ற உருவங்களைத் தோற்றுவிக்கிறது. -கீ

எனது உயிரின் உயிரே, எனது உடல் முழுதும் நினது உயிருணர்ச்சி பரவி இருப்பதை அறிந்து எனது உடலை எக்காலமும் தூய்மையாய் வைத்துக் கொள்ளமுயல்வேன். -கீ

நினது முகம் மறைந்தால் எனது நெஞ்சம் ஓய்வற்றும் துடிக்கின்றது. வேலைக் கடலில் எனது வேலையும் முடிவுறாமல் திகைக்கிறது. இன்று என் பலகணியின் முன்,