பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

203


கோடை பெருமூச்சிடுகிறது, குழம்பி ஒலிக்கின்றது, வண்டுகள் பூந்தோட்டத்தில் தேனிசை பொழிகின்றன. -கீ

எனது வாழ்வை நாணற்குழல் போல் நேராக வைத்து அதில் ஏழிசை ஒலியை பெய்தருள்வாயாக. -கீ

ஆடையில் அழகுறப்புனையப்பட்ட குழந்தை கழுத்தில் தொங்கும் அணிமணி ஆரத்தால் கட்டுண்டு, விளையாட்டின் உரிமை இன்பத்தை இழக்கிறது. அதன் ஆடையே படிக்குப் படி பெருந்தடையாக வளர்கிறது. -கீ

சுமையின் பொறுப்பை ஏற்றுக் கொள்பவனிடம் உனது கவலையை விட்டுவிடு. வருந்தித் திரும்பிப் பார்க்காதே. -கீ

நான் பாடவந்த பாட்டை இன்றுவரைப் பாடவில்லை. எனது யாழினை இசை கூடிப் பண் அமைப்பதிலேயே என் காலமெல்லாம் கழிந்துவிட்டது. -கீ

மலர் இன்னும் இதழ் விரியவில்லை, தென்றல் மட்டும் ஆர்வத்துடன் அருகே வீசிக்கொண்டிருக்கிறது. -கீ