பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


காலை மென்காற்றில் தங்கயாழ் இசைமிழற்றும் போது நின் முன் தோன்றும்படி என்னை நீ கட்டளை இடுவாய் - அதுவே என் அரும்பெரும் பேறு. -கீ


காலைக் கதிர் உதிப்பது திண்ணம், காரிருள் கழிவதும் திண்ணம், வானத்தின் வழியாக நினது வண்ண இசைக் குரல் ஒளிமயமான பொன்னோடைகளாகப் பெருக்கெடுத்துப் பாய்வதும் திண்ணம். -கீ

ஒளி, ஒளி எங்கே இருக்கிறது? ஆசையின் ஆர்வ நெருப்பால் அதைத்தூண்டு, காதல் விளக்கை உன் உயிர்ச்சுடரால் ஏற்றிவை. -கீ

என்னை மூடியிருக்கும் போர்வை, புழுதியும் இறப்பும் கலந்த போர்வை; நான் வெறுத்தாலும், இன்னும் அதை அன்போடு பற்றி இருக்கிறேன். -கீ

தந்தையின் சீற்றத்தில் அழும் தாயின் கண்ணீர் முகம்போல, நின் அருள்முகில் கீழே கவிந்து கிடக்கட்டும். -கீ