பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207 
பிரியா விடை

அமைதி, என் நெஞ்சமே நாம் பிரிந்து செல்வது இனிமையாக இருக்கட்டும்.

அது இறப்பாக இருக்கக் கூடாது. ஆனால் முழுமையாக இருக்கட்டும்.

நேயம் நினைவில் உருகப்படும்; நோக்காடு பாடல்களில் உருகட்டும்.

விண்ணில் பறத்தல் கூடுகளின் மேல் சிறகுகள் குவிவது போன்று இருக்கட்டும்.

இரவில் தென்படும் மலர் போன்று உனது கைகளின் கடைசி தொடுகை கனிவாக இருக்கட்டும்.

எழிலார்ந்த முடிவே, ஒரு கணம் நிலைத்து நில். உன் இறுதிச் சொற்களை அமைதியில் கூறு

உனக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். உனக்கு வழி காட்ட விளக்கை வைத்திருக்கிறேன். -க.கொ