பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

21இந்த மண்ணில் மலர்ந்த முதல் மலர் பிறக்காத பாட்டிற்குள்ளிருக்கும் அழைப்பிதழ்.

- மின்

****

கதவைத் திறந்திடு, காத்திருக்கிறேன் நான். இன்றைக்கான பணி முடிந்துவிட்டது. மாலை விண்மீன் தோன்றத் தொடங்கிவிட்டது.

- இ.அ


என் காதலியே எனது பணிவன்பைச் செலுத்தஉன்னிடம் இன்று தான் வந்திருக்கிறேனென்றால், என்னை மன்னித்து விடு.

கா. ப

****

எங்கிருந்தோ புறப்பட்டுக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்கிற நீரோடை, உண்மை, நல்லவை இவற்றின் முகவர். எல்லையற்ற பரப்பிற்குத் திரும்பிச் செல்கிற அதன் எதிரொலிதான் அழகும், மகிழ்ச்சியும்.

- நினை

****

என் இதயமே, விரைந்திடு இன்றைய நாள் மறைவதற்குள் காதலிலேயே திளைத்திடு.

一 பா. சு

****

உனது மூச்சு இன்பம், துன்பம் இரண்டிலும் மாறி மாறி என்னை முக்கியெடுக்கிறது. நாள் முழுவதும் நான் இசையையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றால்,