பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


நான் சிறிதும் கலங்க மாட்டேன். காரணம் இசையின்மேல் எனக்கு அத்தனை காதல்.

- தா.ஒ

அடிமை மனப்பான்மையுள்ள தூரிகை, குறுகிய சித்திரத் திரையின் அளவுக்கே உண்மையைக் குறைத்துக்

காட்டுகிறது.

மி.மி

உண்மையையும் அழகையும் வாழ்க்கை இணக்கத் தில் காண்கிறது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்ல வில்லை.

- ப.இ

உலகியல் நோக்கில் செல்வத்தை வைத்து மனிதன் எடை போடப்படுகிறான். தகுதியோ அன்பின் அடிப்படையில் எடைபோடப்படுகிறது. •

ப.ப

நல்லது செய்கிறவன் கோவிலின் நுழை வாயிலை அடைகிறான்; அன்பு செலுத்துகிறவன் கருவறையையே அடைகிறான்.

மின்

கொடுப்பவனின் மனத்தைச் சார்ந்திருப்பது அன்பு. ஏழையிலும் ஏழையும் கூட, இதில் வள்ளலாயிருக்கமுடியும்.

தா.ஓ