பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

29



கண்கள் பார்ப்பதென்னவோ மண்ணையும், தும்பு தூசையும்தான்; ஆனால் உணர்வது நெஞ்சத்தின் மூலமே. மாசற்ற மகிழ்ச்சியடைகிறது அதில்.

- த.ஓ

இரவாகிய ஆழமான புதிரிலிருந்து இன்னும் ஆழமான பகலாகிய புதிருக்குள் புகுவது தான் பிறப்பு.

- மின்

பாடல் கனிகளால் என் நெஞ்சத்தை நிரப்பிடும் வகையில் உனது அமைதியின் மையத்திற்கு என்னை இட்டுச் சென்றிடு.

ப. ப

உரிமையுடன் செயல்பட, வெளி உலகின் மென்மையான அழுத்தமன்று நாம் வேண்டுவது. உலகின் சுமையை எளிதாக மட்டுமல்ல மகிழ்ச்சியுடன் தாங்குவதற்கான

உரமளிக்கும் அன்பையே நாம் வேண்டுவது.

எஎ

நிலைத்திருக்கும் அன்பு மொழியைப் பாடிக் கொண்டிருக்கின்றன விண்மீன்கள்.

- க.கொ

முடிவற்ற வைகறையின் வளையத்தில் புதிய இலை களில் புதியதாகப் பிறப்பெடுக்கிறது அதோ செங்கதிர்.

- மின்