பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்உனது கரிய விழிகளில் மழையின் வருகை தனது இசையைக் காண்கிறது.

-கா. ப

பனித்துளி இலை நுனியில் அசைந்தாடுவதுபோல்,காலத்தின் விளிம்புகளில் உனது வாழ்க்கை எளிதாய் கூத்தாடட்டும்.

- தோட்

எனது காதலியிடமிருந்து எனக்குக் கடிதமொன்று வந்துள்ளது. அதில் வெளியில் சொல்ல முடியாத ஒரு தகவல் உள்ளது. இதோ, இறப்பச்சம் என்னை விட்டு அகன்று விட்டது.

- க.பா

நிலவு உன் நெஞ்சத்தில் மறைந்திருக்கும்பொழுது, உதடுகளாகிற சாளரத்தை ஊடுருவி நுழையும் நிலவொளியைப் போன்றது உனது புன்னகை.

-கா. ப

காதல் விளக்கை நெஞ்சத்தில் தாங்கியிருக்கும் பொழுது, அதன் ஒளி உன் மேல் விழுகிறது. நிழலில் நான் பின் தங்கிவிடுகிறேன்.

- க.கொ

இரவின் இருட்டு பகலுடன் இணக்கம் காண்கிறது. மூடுபனி படர்ந்த காலைப்பொழுது முரண்படுகிறது.

- மின்