பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


உனது ஒளியைப் பொழிந்து கொண்டு இந்த நொடிப்பொழுதை உன் மடியின் குறுக்கே நன்கு பரப்பிக் கொள்வாய்.

-எ

எல்லையற்றது என்கிற புல்லாங்குழல் இடைவெளி இல்லாமல் ஊதப்படுகிறது. அதலிருந்து பிறக்கும் ஒலியிசை காதல்.

-க. பா

காலம் காலமாக மனிதகுலம் ஒரே படைப்பில் தான் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. ஆன்மிக வாழ்வு என்பதே அது.

-படை

என் நெஞ்சத்தைக் கமுக்கக் காதலில் அவனுக்கு அளித்து விட்டேன். நம்பிக்கையெல்லாம் வீண்போய்விடும் என்ற எண்ணத்தில் தான் நான் நாள்களைக் கடத்தி வருகிறேன்.

-இரு.அ

தவறு தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. நேர்மையினால் அது முடியும்.

- பப

அதோ பார், என் மன்னியே, அடிவானத்தின் கிழக்கில் பகல் மலர்கிறது. -

-இரு.அ