பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


என் அன்பே, உனது கமுக்கத்தை உனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாதே. மாறாக எனக்குச் சொல்லிவிடு, எனக்கு மட்டுமே.

-நினை

மழையின் மங்குல், வானத்திலே ஒரு கோடி யிலிருந்து மறுகோடிவரைப் பரவி, இன்று பகல் முழுவதையுமே மூடிக் கொண்டிருக்கிறது.

வானம் தன் ஒளியை நமது நெஞ்சங்களில் பாய்ச்சுகிறது.

-எ.சு

எங்களது மலர்களை எடுத்துச் செல்ல நாங்கள் விரைகிறோம். காரணம் கடந்து செல்லும் காற்று அவற்றைக் கவர்ந்து சென்றுவிடலாமே.

-தோட்

கண்டறிந்து விடவேண்டுமென்கிற அடக்க முடியாத ஆர்வம் கொண்டுள்ள முகில்போல், குன்று உயரே உயரே இருக்கும் வானத்தை எட்டிவிடத் துடிக்கிறது.

- மின்

தனது ஆர்வத்தில் எட்டக் கூடியதை முத்தமிடுகிறது கடவுள். மனிதனோ எட்ட முடியாததை எட்டி முத்தமிடுகிறான்.

-பப