பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

43


உன் கண்களைத் திறந்து பார், இசையின் மூச்சுக் காற்றுத் தன் மூலம் வெளியேறுவதைப் புல்லாங்குழல் உணர்வதைப்போல் நீ இவ்வுலகை உணர்ந்திடுவாய். - - எ.எ

நமது ஆளுகையிலிருந்து அழகு வெளியேறுேவதை நுட்பம் வரை நம்மால் அதைக் காணமுடியாது. - -வீ.வெ

முன்னர் நான் பறித்து வைத்திருந்த மலர்களை வாடாமல் வதங்காமல் தன் கூடையில் வைத்து மாலை மயங்கும் நேரத்தில் என்னிடம் எடுத்து வருகிறான் இறைவன்.

- ப.ப.

அன்றாடக் கூலியின் மூலம் எனது பணிக்குப் பலன் கிடைத்துவிடுகிறது.

அன்பின் மூலம் எனது முழு மதிப்பு கிட்டும்வரை நான் காத்திருப்பேன்.

- மின்

தாமரை இலையின் அடிப்பாகத்தில் அரும்பி யிருக்கும் பெரிய பனித்துளி நீ, அதன் மேற்பகுதியில் துளிர்ந்திருக்கும் சிறிய பனித்துளி நான், என்றது பனித்துளி ஏரியிடம்.

- ப.ப.

கிடைக்காதவற்றைத் தேடியலைவது தான் மாந்தனிடம் உள்ள பெரிய துடிப்பு. அதுவே அவனிடமிருந்து உன்னதமான படைப்புகளை வெளிக் கொணர்கிறது.

- எ.எ