பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


இந்தப் பகல் ஒளியில் என் நெஞ்சம் என்ன விரும்புகிறது என்பதே எனக்குத் தெரியவில்லை.

-நினை

இந்த உலகத்தை விரும்புவது எவ்வளவு உண்மையோ, அதை விட்டுச் செல்வதும் அதே அளவு உண்மையாக இருக்கவேண்டுமென்றால், அப்பொழுது வாழ்க்கையில் கூடுவதற்கும், பிரிவதற்கும் ஒரு பொருள் இருக்கவேண்டும்.

-க.கொ

பனிக்கட்டியைத் தேக்கிவைப்பது குன்றத்தின் தலைச்சுமை; பனி உருகி நீரோட்டங்களாகப் பெருக்கெடுக் கும் போது உலகம்முழுவதும் அதைத்தாங்கியாக வேண்டும்.

- மின்

என் மனத்திற்கு இனியவனை, எங்குச் சென்று காண்பேன்?

என்னிடமிருந்து அவன் பிரிந்து சென்று விட்டான். இடத்திற்கிடம் கூற்றரிந்து அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

-படை

தவறுகள் யாவற்றிற்கும் நீ கதவை அடைத்து விட்டால், உண்மை என்றுமே அடைபட்டுவிடும்.

-ப.ப