பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

51


விட்டுச் செல்லாமலேயே அந்த வெளிச்சம் மறைந்து விடுகிறது.

-ப.ப

படைப்பில் செலவிடும் உழைப்பு, அதில் திளைத்து மகிழ்வதற்கே.

- மின்

"நிலவின்மூலம் உனது காதல் கடிதங்களை எனக்கு அனுப்புகிறாய்," என்றது இரவு. கதிரவனிடம் 'எனது விடைகளைக் கண்ணிர்த் துளிகளாகப் புல்வெளி மீது படர விடுகிறேன்.

-ப.ப

என் தலைவனே, உண்மையின் மீது எனக்குள் நம்பிக்கை அப்பழுக்கில்லாமை பற்றிய எனது தொலைப்பார்வை இவை படைப்புத் தொழிலில் உனக்கு உதவிடட்டும்.

- மின்

தான் இயங்கும்போது ஓய்வும் உழைப்பே. கடலின் அமைதி அவற்றில் இயங்குகிறது.

-ப.ப

நம்பிக்கைதான் ஒளியை உணரும் பறவை; பகல் இன்னும் இருளாயிருக்கும் நிலையில் இது இசை எழுப்புகிறது.

-மின்