பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


வாழ்க்கை என்னும் ஊற்று, நீரை வாரி வடிக்கிறது; சிரிப்பிலும், கண்ணிலும் நுரைத்து நிற்கிறது.

-நினை

செம்மலரைப் பார்க்க அவனுக்குக் கண்கள் உள்ளன. ஆனால் அவன் முட்களை மட்டுமே பார்க்கட்டும்.

-ப.ப

தனியாக வாழும் தன்னுரிமையை என்றுமே நாம் கோர முடியாவிட்டால், நாம் ஒரு நாளும் ஒருவர் மற்ற வருக்காக வாழமுடியாது.

-எ.எ

பகல் பொழுதின் சேவையில் எனது அன்பு தன் ஆற்றலைப் பெறட்டும்; இரவின் அணைப்பில் தன் அமைதியை அடையட்டும்.

- மின்

காதலிக்கும்போது, இலை பூவாக மலர்கிறது.
தொழும்போது, மலர் கனியாக மாறுகிறது.

- ப.ப

உனது அழைப்பை ஏற்று உனது பேரரசில் நான் நடமாடவேண்டும்.

- எ

கிளைகள் கனி அளிக்கின்றனவே என்பதற்காக நிலத்தினடியில் படர்ந்திருக்கின்ற வேர்கள் பலன் கேட்கிறதில்லை.

-ப.ப