பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரும்பொருள்

பகலின் விளிம்பை இரவு எந்த இடத்தில்
தொடுகிறதோ,
வெளிச்சம் இருளை எந்த இடத்தின் முகப்பில்
தொடுகிறதோ,
கரைகளின் முத்தத்தை ஒரு கரையிலிருந்து மறு
கரைக்கு அலைகள் எந்த இடத்தில் எடுத்துச்
செல்கின்றனவோ,
அந்த இடத்தில் என்னை நான் கூடுகிறேன்.
ஆழம் காணமுடியாத கடலின் நெஞ்சத்திலிருந்து
பொன்ணொத்த குரலொன்று என்னை அழைக்கிறது.
மாலை நேரத்துக் கண்ணீருக்கிடையே உன்முகம்
காண முயல்கிறேன்.
உன்னை பார்த்துவிட்டேன் என்பது கூட கண்களால்

உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
-எ