உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

57


ன்பின் ஒளியே உலகின் திரண்ட செல்வம், அந்த உலகின் வாயிற் கதவை எனக்காகத் திறந்து வைக்கிறது. ஞாயிற்றின் வெளிச்சம்.

- மின்



விண்மீன்களை எட்டிப் பிடிக்கத் தங்கள் கைகளை உயர்த்தும் குழந்தைகளின் ஆர்வத்தைப் போன்றன குன்றுகள்.

- ப.ப

னி மனிதன் மூலமாக உலகின் உணர்வுகளை வெளிப்படுத்துவதே கலை.

-எ.எ


ங்கள் தங்கள் முயற்சிகளில் தோல்வியுற்ற உலகங்களை முன் நிறுத்தும் எனது உலகத்தை நான் தாங்கி நிற்கிறேன்.

- ப.ப

(எனது வாழ்க்கையும்)நாணல் செடிபோன்று, நம்பிக்கை, வெற்றி, தோல்வி என இடைவெளி காட்டி மிளிரும் பல வண்ணங்கள் கொண்டுள்ளது.

- மின்

மாந்தர்கள் கல் நெஞ்சம் படைத்தவர்கள். ஆனால் மாந்தன் கருணை உள்ளம் படைத்தவன்.

-ப.ப