இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
61
கண்களுக்குக் இமைகள் போல், உழைப்பிற்கு ஓய்வு உரிமையாகிறது.
- ப.ப
★★★★
அழிவின்மையாகிய நீரூற்றின் களியாட்டமே வாழ்வு.
-எ.எ
★★★★
என் நெஞ்சம் வருத்தத்தில் உள்ளது; காரணம் அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பது அதற்குத் தெரியாததே.
- எ
★★★★
தனது சொற்களினாலேயே சிந்தனை உயிர் வாழுகிறது, வளரவும் செய்கிறது.
- ப.ப
★★★★
அகவையும் இறப்பும் என்பதெல்லாமல் உண்மையானால், குழந்தை மனிதனின் நெஞ்சத்திற்கு அத்தனை மகிழ்ச்சி கொணர முடியுமா?
- எ.எ
★★★★
உனது அமைதியான உருவத்தைப் பார்க்கிறேன்.என்னை சுவைத்துக் கொண்டிருக்கும் உன் விழிகளின்மேல் திடீரென்று என் பார்வை விழுகிறது.
- எ
★★★★
சாலையின் எல்லையிலிருக்கும் ஆலயத்திற்கில்லை