62
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
எனது காணிக்கைகள். ஒவ்வொரு திருப்பத்திலும் என்னைத் திகைப்பிலாழ்த்தும் சாலையோர குட்டிக்கோவில்களுக்கே எனது காணிக்கை.
-மின்
★★★★
என்னைத் துன்புறுத்துவது எது? வெளியில் வர முயலும் என் ஆன்மாவா? இல்லை, வெளி உலகிலிருந்து என் நெஞ்சுக்குள் புகுவதற்காகக் கதவைத் தட்டும் ஆன்மாவா?
- ப.ப
★★★★
அறிவு, உணர்வு இவற்றின் மூலம் பக்குவப் படுத்தப் பட்ட குழந்தையின் குணம் கொண்டது மெய்யறிவு.
- எ.எ
★★★★
எனது உடம்பை வளர்ப்பதற்காக உலகனைத்திலிருந்தும் மகிழ்ச்சி வெள்ளம் ஓடி வருகிறது.
-க.கொ
★★★★
விண்மீன்கள் யாவையும் என்னில் ஒளிவீசுகின்றன என்பதை நானறிவேன். வெள்ளம் போல் என் வாழ்வில் பீறிடுகிறது உலகம்.
- க.கொ
★★★★
ஓ, படகோட்டியே, அது தான் திருப்புமிடத்தில் அமர்ந்து கொள். காரணம், எனது படகு விடுதலை பெறத் துடிக்கிறது.
-எ
★★★★