உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

63


ப்பலில் இருக்கும் நீர் பளபளக்கிறது. கடலில் உள்ள நீர் கருமை படர்ந்திருக்கிறது.சின்னஞ் சிறிய உண்மைச் சொற்கள் தெளிவாக உள்ளன. பேருண்மையில் அமைதியே குடி கொண்டுள்ளது.

-ப.ப

லியாகிற நெருப்பை அணைப்பதன் மூலம் மனிதன் நலம் பெறுகிறான். நெருப்பின் மேல் ஆட்சி செய்தவன் மூலம், அவன் அறிவொளியை ஏற்றி வைக்கிறான்.

- எ.எ

ன் அன்பிற்குரியவர்களுக்கென நான் விட்டுச் செல்வது சிறிய பொருள்களையே. பெரிய பொருள்கள் யாவருக்கும் உரியவை.

-ப.ப

ருட்டில் குமைந்து கொண்டிருக்கும் என் கொண்டல்களே, ஒன்றை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். செஞ்சுடரை மறைத்தது நீங்கள் தானே.

-மின்

பெண்ணே, நிலத்தைக் கடல் குழ்ந்துள்ளது போல், ஆழமான உன் கண்ணின் வாயிலாக உலகின் நெஞ்சத்தை நீ சூழ்ந்திருக்கிறாய்.

-ப.ப