பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

65



பாடும் பணி

உன்னைப் பாடும் பணியையே பணியாகப் பெறும் பேறு பெற்றேன். எனது பாக்களில் நினது இளவேனிற்கால மலர்களின் தோற்றம் பொலிந்தது. நினது ஒசையிடும் இலைகளுக்கு, அவை தாளங்கொட்டின. நினது இரவின் அமைதியிலும் காலைப்பொழுதின் இன்னமைதியிலும் நான் பாடினேன். கோடையின் முதல் மழையின் மணம் எனது பாடல்களில் சுழன்றோடுகிறது. பயிரின் பயன்கொளும் இலையுதிர்கால ஆரவாரம், என் பாக்களில் ஒலிக்கிறது. எனது தலைவனே, நீ எனது உள்ளத்தில் கோயில் கொள்ள வரும் நாளில், எனது பாடல்கள் தடைப்படாது, உன்னை ஆவலோடு வரவேற்குமாக!

- க.கொ