பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

67


மிகச் சிறந்தது எதுவும் தனியாக வருவதில்லை.

லவற்றோடு கூட்டுச் சேர்ந்து கொண்டுதான் அது வருகிறது.

-ப.ப

ரவமற்றிருந்து அமைதியாகிற என் உள்ளுயிர் உன் சொற்களைக் கேட்கட்டும்.

-எ

புகழ் என்னை நாணச் செய்கிறது. ஏனெனில் கமுக்கமாக அதற்கு நான் ஏங்குகிறேன்.

-ப.ப

சிரித்தவாறே பாய்ந்து வரும் நீரோடையிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியில் தன் தவிப்பைக் காண்கின்றன கூழாங்கற்கள். அதே போன்று, விண்ணிலிருந்து மகிழ்ச்சி கொண்டுவரும் இன்னிசைப் பாடல்களில் தன் துயரத்தைக் காண்கிறது வலி.

- எ.எ

ளந்தென்றலாக மாறி உன்னைத் தழுவி விளை யாடுவேன்; நீ குளிக்கும் நீரில் சிறு அலைகளாகத் துள்ளி வருவேன்; தவழ்ந்து வந்து உன்னை மீண்டும் மீண்டும் முத்தமிடுவேன்.

-வ.பி

கோயிலின் துயரச் சூழலிலிருந்து விடுபட்டுக்-