இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
73
அமைதியின் மனங்கொண்ட மாந்தர்கள், இயற் பொருளில் ஒருக்காலும் அழியாமையைத் தேட மாட்டார்கள். -எ.எ.
★★★★
தனது சிறிய வட்டத்திற்குள் தான் பனித்துளி பரிதியை அறிய முடியும். -மின்
★★★★
எனது பிரிவின் பொழுது காற்று இசையின் முணு முணுப்புடன் கலந்து விடுகிறது. -எ
★★★★
சித்திரங்களின் வாயிலாக உலகம் என்னுடன் பேசுகிறது, எனது உயிர் இசைவழியாக விடையளிக்கிறது -மின்
★★★★
உலகைக் காதலிக்கும்பொழுது, நாம் அதில் வாழுகிறோம். -ப.ப.
★★★★
வாழ்க்கை வளர்ச்சி பெறும்போது, ஒவ்வொரு கட்டமும் முழுமை பெறுகிறது; மலரும் கனியும் போல. -எ.எ
★★★★
ஞாயிற்றின் நினைவாக, தனது எண்ணற்ற விண்மீன்களை வானம் எண்ணிக் கொண்டிருக்கிறது - -மின்
★★★★