இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
இறந்தவர்கள் தங்கள் புகழில் வாழட்டும். உயிரோ டிருப்பவர்கள் அன்பின் அழியாமையில் வாழட்டும்.
-ப.ப
★★★★
அன்பின் அடிப்படையில் துறக்கத்தை எழுப்புவது உயிரின் பணி.
- எ.எ
★★★★
இரவின் இருட்டு வலியைப்போல், ஊமையானது. பகலின் இருட்டு, ஒளியற்றதைப்போல், அமைதியானது.
- மின்
★★★★
உனது உண்மையின் பொருளை ஆழ்ந்து எண்ணி ஆராய்ந்துள்ளவர்கள் சிலர் உள்ளனர்; அவர்கள் உணர்ந்தவர்கள்.
உனது இசையின் சிறப்பைச் சுவைக்க முயன் றுள்ளேள்; நான் அதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- மின்
★★★★
பல பொருள்களை அடையப் பல வழிகளைக் கையாளாமல் இருப்பேனாக.
-எ
★★★★
சில வண்டுகள் எழுப்பும் கீச்சிடும் ஒலி-ஒசையின் அந்தி ஒளி அது தான். என் மனத்தின் அமைதி நிரம்புவதாக நான் எண்ணுகிறேன்.
-ப.ப
★★★★