பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

93


ஆனால் பறவைகளோ உனது பெயரை உனது காலை ஒளியில் பாடுகின்றன. காரணம் உனது பெயரே, மகிழ்ச்சி தான்.

-ப.ப.

லைவனை வரவேற்க முகத்திரையை விலக்கி இன்முகம் காட்டும் மணப்பெண்ணைப் போல, காட்டிலே செல்லும் சாலையின் திருப்பத்தில், இலையுதிர் காலத்து படிஞாயிற்றின் புதுமை என்னைத் தேடி வந்து எனக்குக் காட்சியளித்திருக்கிறது.

யிர் மட்டுமே தொடக்கூடிய மலரை உடல் எவவாறு தொடமுடியும்? - -தோ

விண்ணுக்கு விண் நீரைப் பரவலாகப் பொழிந்து வரும் கோடைக் கொண்டலாக நீ என்னிடம் வருவாய். - -எ

நாம் மூச்சுவிடும், ஒவ்வொரு கணமும் இறைவனிடத்தில் நாம் உறைந்துள்ளோம் என்கிற உண்மையை நாம் உணர்வோமாக. - -ஆ

முடிவற்ற வாழ்க்கைக்கு இசைப் பாடும் தனது பொன்மயமான இசைக்கருவியை விண்மீன்களின் அமைதிக்கு உவந்தளிக்கிறது பகல் பொழுது. - -மின்