பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

95


எதிர் காலப் பலன்களுக்காக இல்லாமல் இந்த நேரத்திற்கு மட்டுமே தங்கி நிற்கிற மலர்களின் இதழ்களை வேனிற்காலம் உதறி வீசுகிறது.

-மின்

பாம்பு சீறிச் சென்றிடுமுன் அம்பினிடம் வில் கிசுகிசுக்கிறது. உனது விடுதலையே எனது விடுதலையும்

-ப.ப

கனக்கற்ற பரிசுகளின் மூலம் தன்னையே தன்னிச்சையாக வழங்கி விடுகிறது அன்பு.

-சா

நிலத்தின் உறக்கமாகிற தளைகளிலிருந்து விடுபடும் மகிழ்ச்சி எண்ணற்ற இலைகளுள் பாய்கிறது; ஒரு நாள் மட்டும் காற்றில் கூத்திடுகிறது.

-மின்

உனது முத்தமாகிற தங்கப்பேழையே எனது நெஞ்சம் என்றது மறைந்திடும் கதிரவனில் வெளிப்படும் முகில் ஞாயிற்றினிடம்.

-ப.ப

காதல் என்பது வெறும் உணர்வில்லை; அதுவே மெய்யெனும் படைப்பின் அடிப்படை.

-சா