பக்கம்:இரவு வரவில்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுப்பகலில் வளைந்துசெல்லும் மணற்பாட்டை தீய்க்கும்!
நறுக்கென்று நெருஞ்சிமுள் ஒன்றிரண்டு தைக்கும்!
துடுப்பைப்போற் காய்க்கின்ற சுரபுன்னைக் கொம்பில்
அணிற்பேடு துணைதழுவும்! இதுவேஎன் காதல்!
தடுப்பில்லா வாழ்க்கையே நான்விரும்பும் வாழ்க்கை;
தமிழ்வாழ்க்கை! இலைஎன்று யார்சொல்லக் கூடும்?
கடுப்போடு மனையாட்டி என்னருகில் வந்தாள்!
காதல்என்றேன்! ‘உனக்கேது காதல்?’எனச் சொன்னாள்
4


அந்தியிலே வீடடையும் ஆனிரையின் கூட்டம்!
அழகொளியைச் சிந்திவிட்டுப் போய்மறையும் வெய்யோன்!
புந்தியிலே வெறியேறும்! பொற்காசு மீன்கள்
துணைபிரிந்த புட்களுக்கோ ஒளிகாட்டி நிற்கும்!
வந்ததுவே பிறைநிலவும்! இதுவேஎன் காதல்!
வாய்பிளந்து பார்த்திருந்தேன்; என்மனைவி வந்தாள்;
நொந்திருந்தாள் எனஎண்ணிக் ‘காதல்’ எனச் சொன்னேன்!
‘உனக்கேது காதல்?’ எனநொடித்தொடித்துப் போனாள்
5


என்வீட்டு வாயிலிலே சிறுகுழந்தைக் கூட்டம்
எழுந்தோடி நடமாடி ஏதேதோ பாடும்!
மென்கொம்பு கையேந்தி விளையாடு வோரை
அடித்தடித்துச் சிரித்திருப்பான் நலங்கிள்ளிப் பையன்!
பொன்னான விளையாட்டு! பிள்ளைக்கா பஞ்சம்?
புத்தின்ப்ம் நானடைவேன்! இதுவேஎன் காதல்!
என்மனைவி ‘உண்ணுதற்கு நினைவிலேயோ?’ என்றாள்!
‘காதல்’ என்றேன்! ‘உனக்கேது காதல்' எனச் சொன்நாள்
6


ஊரெல்லாம் உறங்கிற்று! நான் உறங்க வில்லை !
ஒளிவிளக்கும் நானும்தான் தனித்தறையில் நின்றோம்!
காரெல்லாம் வானத்தில் தவழ்ந்திருக்கக் கண்டேன்!
கதவிடுக்கு மரக்கிளையில் காற்றின்கொண் டாட்டம்!


8
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/17&oldid=1179814" இலிருந்து மீள்விக்கப்பட்டது