பக்கம்:இரவு வரவில்லை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளையே தேடித் தேடி
அலைந்தோடும் மடமை நெஞ்சே!
அவளின்றேல் உன்னால் ஒன்றும்
ஆகாதோ? கண்ட தென்ன?
குவளையிற் சிரித்தாள்! முல்லைக்
கொடியிடை இடையைக் கண்டேன்!
அவளில்லை எனினும், பின் ஏன்
அலைகின்றாய் பேதை நெஞ்சே?
4


வயல்வெளி திரிந்தேன் அந்த
மங்கையை மறப்ப தற்கே!
கயல்பாயும் குளத்தில் வந்தாள்;
கண்கண்டேன்; அவளைக் காணேன்!
அயலிருந் தழைத்தாள்; சென்றேன்!
அங்கவள் இருந்தால் தானே!
செயலற்றேன்; செய்வ தொன்றும்
அவளின்றேல் இல்லை நெஞ்சே!
5


வீட்டினில், விளக்கில், வானில்,
விரிகடற் பரப்பில், கற்றோர்
ஏட்டினில், பண்ணி யைந்த
இசையினில், குளத்தில், முல்லைக்
காட்டினில் அவளை யன்றி
வேறொன்றும் கண்டே னில்லை!
கூட்டிவா; வந்தால், உள்ளக்
குறைதீரும்; வாழ்வேன் நெஞ்சே!
6



16
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/25&oldid=1179779" இலிருந்து மீள்விக்கப்பட்டது