பக்கம்:இரவு வரவில்லை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. நீ இல்லாச் சில நாட்கள்


நீஇல்லாச் சிலநாட்கள் †வீயில்லாச் சோலை!
நீரில்லா மலர்ப்பொய்கை! நிழலில்லாப் பாட்டை!
தீயில்லாக் குளிர்காலம்! சீரில்லாப் பாடல்!
திக்குத்திசை இல்லாச் செழுங்காடு போலாம்!
1


நீஇல்லாச் சிலநாட்கள் சேயில்லா வீடு!
நெடுங்கடலின் மணற்காடு! நெஞ்சள்ளாப் பேச்சு!
தாயில்லா இளங்கன்னி! தமிழில்லா ஆட்சி!
தம்பிஇல்லா அண்ணன்! தலைவனில்லாப் படையாம்!
2


நீஇல்லாச் சிலநாட்கள் நினைவில்லாப் பாடல்!
நிலவில்லாப் பெருவானம்! கழியில்லா நெய்தல்!
தீயில்லா வைகறையே! தென்றலில்லா மாலை!
தெளிவில்லா நெஞ்சத்தான் விளக்கத்தைப் போலாம்!
3


நீஇல்லாச் சிலநாட்கள் வேயில்லாச் சாரல்!
நீரோடாப் பேராறு! நெல்விளையாச் சிற்றூர்!
காயில்லாப் பழத்தோப்பு! கண்ணில்லாப் பெண்டீர்!
காற்றில்லாக் கொடுங்கோடைக் காலத்தைப் போலாம்!
4


† வீ - மலர்


21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/30&oldid=1180061" இலிருந்து மீள்விக்கப்பட்டது