பக்கம்:இரவு வரவில்லை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13. முடியாதே!


பாய்ந்தோடும் ஓடையில் தாமரைப்பூ-என்னைப்
பார்த்துச் சிரித்ததே; உன்னைக் கண்டேன்!
தேய்ந்த நிலவல்ல நீயெனக்கே!-உன்னைத்
தேடா திருக்க முடியாதே!
1


குட்டையில் தேங்கிய பாசியின்மேல்-நீலம்
எட்டிச் சிரித்ததே; உன்னைக் கண்டேன்!
விட்டுப் பிரிந்தாலும், பேரழகே!-உன்னை
விட்டுப் பிரிய முடியாதே!
2


வீட்டு முருங்கையிற் பச்சைக்கிளி-கூச்சல்
போட்டுப் பறந்ததே; உன்னைக் கண்டேன்!
நாட்டைக் கடந்தே இருந்தாலும்-உன்னை
நான்விட்டு நீங்க முடியாதே!
3


மேய்ந்தோடி வந்தது பெட்டைக்கோழி-அதன்
மென்னடை கண்டேன்; உன்னைக் கண்டேன்!
காய்ந்த வெளியல்ல நீயெனக்கே!-உன்னைக்
காணா திருக்க முடியாதே!
4


பாண்டத்து வெண்ணெயைப் போலநிலா-ஒளிப்
பாலை உருட்டிற்றே; உன்னைக் கண்டேன்!
நீண்ட தொலைவில் இருந்தாலும்-உன்னை
நினைக்கா திருக்க முடியாதே!
5


25
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/34&oldid=1179809" இலிருந்து மீள்விக்கப்பட்டது