பக்கம்:இரவு வரவில்லை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. காளையின் கடிதம்

ஊரார் அலர்தூற்ற, உற்றார் பகைக்கக்,கண்
நீர்பெருக்கி நீவாட வேண்டாவே!-காராடும்
வானம் இடிந்தாலும், வாளெடுத்து வந்தாலும்
நானெதிர்ப்பேன்! நம்பி இரு!
1


சாதிக் குறைசொல்லித் தட்டிக் கழித்தாலும்
வாதாடி வந்துன்னை நானடைவேன்!-காதின்
குழைமின்னல் கண்டு குயில்பாயுஞ் சோலை
அழகே! நீ அஞ்சா திரு!
2


தாலி இழந்தாளைத் தாலிகட்டி இற்பேணல்
‘ஏலா’ தெனப்பெற்றோர் ஏசிடினும்,-வேலி
நறைகமழ் பூங்கூந்தல் நங்காய்! மணப்பேன்!
குறைகூறு வார்கூ றுக!
3







28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/37&oldid=1179490" இலிருந்து மீள்விக்கப்பட்டது