பக்கம்:இரவு வரவில்லை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19. உண்டோ தோழி?

பந்தர் படர்ந்த பசுங்கொடி முல்லை
நகுமே தோழி! அவர்வரக் காணேன்!
சாய்மரக் கிளையில் அமர்ந்துகால் ஆட்டி
வேய்குழல் இடைமகன் வாய்வைத் தூதப்
பாய்புனல் இடிகரை பசுவொடு காளை
5 மேயும் ஊரன் மேன்மையை எண்ணிப்
போய்வந் தனனே குறியிடம்!
உண்டோ விழிகள் பண்டைய நிலையே!
8




33

இ.வ.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/42&oldid=1179505" இலிருந்து மீள்விக்கப்பட்டது