பக்கம்:இரவு வரவில்லை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. அவனினும் கொடியள்!

குன்றெதிர் ஒலிக்கும் குளிர்பூஞ் சாரல்
மரத்தைச் சுற்றும் மலர்க்கொடி கண்டும்
தாழ்கிளை தாவித் தலைகீழ் ஆடும்
குட்டிக் குரங்கைக் கிட்டும் மந்தியைத்
தழுவிக் கடுவன் தலைபார்த் திருக்கும்
5 நெடுவழி திரும்பாக் கரும்புனல் நாடன்
கொடியனில் கொடியன் தோழி!
அவனினும் கொடியள் உயிர்வாழ் வோளே!
8








34
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/43&oldid=1179510" இலிருந்து மீள்விக்கப்பட்டது