பக்கம்:இரவு வரவில்லை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. பிரிவு


சோலைக் கலகலப் பெல்லாம்-அடடா!
சொரியும் உன்சொல் இன்பம்!
சுருதி மீட்டும் வண்டோ-எனக்குச்
சொல்லும் உன்வாய்ப் பாட்டை!
காலைச் சிலுசிலு காற்றில்-உன்றன்
கையின் அணைசுகம் காண்பேன்!
காலைக் கதிரின் ஒளியில்-உன்றன்
களைசேர் முகமே காண்பேன்!
1


குட்டை பூத்த மலர்கள்-உன்றன்
குளுமைச் சிரிப்பைக் காட்டும்!
குளத்துக் கெண்டை மீன்கள்-உன்றன்
குறுகுறு விழியைக் காட்டும்!
சுட்டும் கன்னச் சுழிப்பை-நீரில்
சுழலும் கரிய வண்டும்!
சொல்லும் முருங்கை மொட்டும்-உன்றன்
சொக்கும் பல்லின் எழிலை!
2


பட்டப் பகலின் வெயில்போல்-நெஞ்சைப்
பற்றித் தீய்க்குமுன் பிரிவு!
பழைய நினைவோ என்னுள்-நீரில்
பாய்ச்ச முன்னெழு நெட்டி!
சொட்டும் உடலின் வியர்வை-உன்றன்
சோர்ந்த விழிநீர் ஒக்கும்!
சொட்டைச் சொல்லிச் சிரித்த-அந்தச்

சொல்லென் காதில் ஒலிக்கும்!
3

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/46&oldid=1180066" இலிருந்து மீள்விக்கப்பட்டது