பக்கம்:இரவு வரவில்லை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. கனவு ஒரு கானல்!


என்அன்னை சிற்றுாராள்! எழுதாத பாடல்!
இல்லறத்தின் வழிகாட்டி! புகழ்ச்சியில்லை! உண்மை!
மின்னலிடை தேயாத வெண்மதியம்! நீங்கள்
விரும்புகின்ற என்பாட்டின் ஆதியவள்! அந்தத்
தென்னவளைத் தீந்தமிழை என்னுயிரை அன்பைச்!
சிறுவயதில் நானிழந்தேன்! ஆனாலும், அந்த
முன்னவர்கள் தீந்தமிழை மறக்கவுமா கூடும்?
முழுநேரம் அவள்கனவே! கனவும்ஒரு கானல்!
1


‘என்தந்தை, என் தந்தை, என்தந்தை’ என்றே
எழுதுகின்ற வேளையிலும், எண்ணுகின்ற போழ்தும்
தென்னவர்கள், தமிழ்காத்த சிறுத்தையின மக்கள்
தெரிகின்றார்! ஆனாலும், என்தந்தை போல
அந்நாளில் இருந்தாரோ என்கின்ற ஐயம்
அகத்திலெழும்; அவர்பேச்சோ என்காதில் கேட்கும்!
எந்நாளும்! என்னருகில் ஏதேதோ பேசி
இருப்பதைப்போல் கனாக்காண்பேன்! கனவும்ஒரு கானல்!
2


இளவயதில் தாயற்றுத் தத்தளித்த போழ்து
யார்யாரோ எனைத்தூக்கிச் சிரிப்பூட்டப் பார்த்தார்!
தளதளத்த என்பாட்டி ‘அம்மாயி’ என்றன்
தனிச்சொத்து! நானவளின் தணியாத காதல்!
உளத்தினிலே குடியேறிப் போனஅவள்”காட்சி
உயிர்பிரியும் வேளையிலும் நான்மறக்க மாட்டேன்!
வளர்த்தஅவள் எனைப்பிரிந்தாள்! அவளன்புச் சாயல்

மாறாத பெருங்கனவு! கனவும்ஒரு கானல்!
3

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/51&oldid=1179980" இலிருந்து மீள்விக்கப்பட்டது