பக்கம்:இரவு வரவில்லை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. சுதந்தரம்


பட்டே உனக்குக் கட்டி மகிழ்வார்;
பொன்னும் மணியும் புனைவார் உனக்கு;
பாலும் பழமும் சாலக் கொடுப்பார்;
பலபல மொழியினைப் பயிற்றி மகிழ்வார்;
சேல்விழி மாதர் சேர்த்தணைத் துன்றன்
5

சென்னி தடவிச் சிறுநகை பூப்பார்!
ஆயினும், கிளியே! அடிமைநீ கூண்டுள்!
உன்றன் அக்காள் உயிர்க்கா தலனொடு
வானிலே திரிந்து, வாழையில் அமர்ந்து
தென்றலில் ஆடித் தீங்கனி கோதி
10

எங்கும் தனது இருப்பைக் கொண்டாள்!
இரும்புக் கூண்டும், இன்சொல் மாதரும்
சதமா உனக்கு? சொல்லேன் நீதான்?
வானை நோக்கி வாயைத் திறந்தே
‘அக்கா!’ என்றுநீ அழைத்தழைத்(து) இருந்தால்
15

புதரில் ஆடும் கோவைப்

பழமா சுதந்தரம், பறித்தவள் கொடுக்க?17

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/55&oldid=1180036" இலிருந்து மீள்விக்கப்பட்டது