பக்கம்:இரவு வரவில்லை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. போவோம் புதுவைக்கு!


பிள்ளைக்குத் தாய்தகப்பன் முனைந்து சென்றே
பெண்பேசுங் கொடுங்காலம் ஒழிந்தே போச்சு!
கிள்ளை யைப்போல் தன்னிணையைத் தேர்ந்தெடுத்தாற்
கேடில்லை; வாழ்க்கைபெரும் இன்பம்! வீட்டின்
உள்வந்தான் ஒன்றுவிட்ட என்றன் தம்பி;
‘வேதாந்தம் பேசுகின்றார்’ பெற்றோர் என்றான்;
வெள்ளரிபோல் நிறமுடைய கன்னிப் பெண்ணே
வேண்டுமண்ணே, வாபோவோம் புதுவைக்(கு)!’ என்றான்.
1

கதவருகில் தாய்காட்டக் கண்டோம் ஓர்பெண்!
கைவீசி நடைகாட்டக் கண்டோம் ஓர்பெண்;
விதவிதமாய் ஆடையணி பூண்டங் கோர்பெண்
வேல்விழியைத் தூதனுப்பக் கண்டோம்; பின்னும்
மதயானை மயில்குலத்தைப் பழிக்கும் பெண்கள்
வாய்ப்பாட்டு, பட்டம்சீர் வகைகள் கண்டோம்;
‘வதுவர்களே எம்மிடத்தே நாங்கள் என்றும்
வைத்திருப்போம்; சம்மதமோ?’ என்றாள் ஓர்தாய்.
2

‘என்னதொழில் ? படிப்பென்ன? உடன்பி றந்தார்
எத்துணைபேர் ?’ எனவடுக்காய்க் கேட்டான் தந்தை;
‘என்னவென்ன அணிதருவீர்? நான் பெண் ணுக்கோ
இதுதருவேன்; அது தருவேன்’ என்றாள் தாயார்;
‘என்ன?’ வென்றேன்; ‘பிடிக்கவில்லை!’ என்றான் எம்பி;
எழுந்திருந்தோம்; நடுக்காட்டு முல்லை போலத்
தன்குடிசை வறுமையினால் நான்காண் டாகத்
தவிக்கின்ற ஓர்கன்னிப் பெண்ணைக் கண்டோம்.
3


54
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/62&oldid=1179807" இலிருந்து மீள்விக்கப்பட்டது