பக்கம்:இரவு வரவில்லை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாலே அழியாத திருவைச் சேர்க்கும்
செயல்புரிந்தார் மலையரசர்; அன்னோர் உள்ளக்
கருவாகி உருவாகி வளத்தை நல்கும்
பல்கலைமா மன்றத்தில் கற்போர் தம்மை
உருவாக்கும் திருஇராம நாதர் அண்ணா
மலைகவரும் சான்றோரை உதவு கின்றார்!
பெருகஅவர் நற்றொண்டு! வாழ்க! அண்ணா
மலைக்கவரும் தம்பியரும் பின்விட் டாரே!
7


விண்தாவும் நீள்தென்னை விரிந்த பாளை
வெண்குருகென் றேசேல்கள் நீரில் தாவும்;
மண்தாவும் நெற்கதிர்கள்; பழுத்த வாழை
மரம்தாவும் வயல்பூத்த கரும்பின்மீது;
பண்தாவும் சோலையிலே பாடும் வண்டு
பனிமலரின் மேல்தாவும்; காணும் மக்கள்
கண்தாவும் மணிமாடத் தில்லை அண்ணா
மலைநகரத் தமிழ்மன்றில் கவிய ரங்கில்!
8


கல்தோன்றி மண்தோன்றாப் பழங்கா லத்துக்
குடிவழியில் வாழ்ந்தபெரும் கவிஞர் கூட்டம்
சொல்தோன்ற இலக்கியமும் யாப்பும் தோன்றச்
சுவைமிகுக்கும் செந்தமிழை உயிரை வாழ்வை
எல்தோன்றி எழுகின்ற ஒளியைப் போல
என்றென்றும் நிலைத்திருக்கப் படைக்க லானார்!
அல்தோன்றும் வெண்ணிலவே கவிஞர் கூட்டம்!
அவர்புகழோ வெண்ணிலவே! பாடக் கேளீர்!
9



78
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/84&oldid=1179417" இலிருந்து மீள்விக்கப்பட்டது