பக்கம்:இரவு வரவில்லை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. எங்கள் அண்ணா!

வாவிநிகர் தாமரைபோல் முகத்தோன் அண்ணா!
வளர்பரிதி! தமிழ்மக்கள் அகத்தோன் அண்ணா!
காவிப்பல் இளநகையோன் எங்கள் அண்ணா!
கருத்தாழப் பேச்சுடையோன் எங்கள் அண்ணா!
தாவிவரும் குழந்தைபோல் இனியன் அண்ணா!
தமிழ்ப்பகைவர் நடுநடுங்கம் கொடியோன் அண்ணா!
பூவிலுறை நறுந்தாதை மணத்தை நல்கும்
புதுத்தென்றல், தமிழ்த்தென்றல் எங்கள் அண்ணா!
1

புன்னைவளர் கடல்முத்தம் எங்கள் அண்ணா!
புத்துலகத் தமிழ்ச்சிற்பி எங்கள் அண்ணா!
கன்னல்சேர் செஞ்சொல்லான் எங்கள் அண்ணா!
காரிருளுக் கொளிசெய்வோன் எங்கள் அண்ணா!
தென்னகத்துத் தனித்தலைவன் எங்கள் அண்ணா!
திராவிடத்துப் பேரறிஞன் எங்கள் அண்ணா!
செந்நெல்சூழ் திராவிடத்தை மீட்க இந்நாள்
திரண்டெழுந்த போர்ப்படையின் தலைவன் அண்ணா!
2

நற்றமிழர் வாழ்விற்கே உழைக்கும் அண்ணா!
நமையேய்க்கும் நரிகளுக்குப் புலிப்போத்(து) அண்ணா!
கற்றறிந்த புலவரெலாம் வியக்கும் அண்ணா!
கம்பரச மயக்கத்தைப் போக்கும் அண்ணா!
கொற்றத்தார் சுற்றத்தார் எனினும் அன்னார்
குறைகாணின் இடித்துரைக்கும் அறிஞர் அண்ணா!
பெற்றெடுத்த தாய்நாட்டின் அடிமை நீக்கும்
பெரும்படையின் புலிக்கூட்டத் தலைவன் அண்ணா!
3


85
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/91&oldid=1179646" இலிருந்து மீள்விக்கப்பட்டது