பக்கம்:இரவு வரவில்லை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. கலைஞர் வாழ்க!


அலைகடலின் மலைமுகட்டில் தொடுவா னத்தில்
அதிகாலைப் பொற்றுகளை விண்ணில் தூவித்
தலைநிமிரும் இளம்பரிதி எங்க ளண்ணா
தமிழர்களின் தனித்தலைவன் வழியில் வந்ந
கலைஞ!கரு ணாநிதியே! சொல்லின் செல்வ!
களங்கண்ட மறப்புலியே! தமிழர் வாழ்வே!
விலையில்லாத் தாயகத்தின் இருளைப் போக்கும்
விண்ணொளியே! தமிழ்மறவ! வாழ்க நீடே!
1

தம்பிகளில் தலைசிறந்த கலைஞர் ஏறே!
தமிழ்நாட்டு மலைச்சாரல் குளிர்பூங் காற்றே!
கொம்புத்தேன் பேச்சாள! கடலா ழத்தே
குளித்தெடுத்த நன்முத்தே! பகையை வீழ்த்தும்
அம்பொத்த செயல்மறவ! சங்க கால
ஆன்றோரின் புறப்பாட்டே! இளைஞர் நெஞ்சில்
தெம்பேற்றும் எழுத்தாள! தமிழர் வாழ்வின்
திருவே!கரு ணாநிதியே! வாழ்க நீடே!
2




87
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/93&oldid=1179644" இலிருந்து மீள்விக்கப்பட்டது