பக்கம்:இரவு வரவில்லை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. பாரி வாழ்க!

பொன்னே! புதுவாழ்வே!

புத்தமிழ் தே!பாரி!

கன்னல் சுவையீன்ற

கற்கண்டே!-மன்னிக்

குலச்சுடராய் நின்று

குடிப்புகழை நாட்டி

நிலவுலகில் வாழ்க நிலைத்து!1


பிள்ளைக் குறைதீரப்

பிறந்த சிறுபுலியே!

கிள்ளையே! பாரி!

சிறுகுழந்தாய்!-வெள்ளமிகு

பொன்னிப்பே ராற்றுப்

பொடிமணல்போல் பல்லாண்டு

மன்னிநீ வாழ்க மகிழ்ந்து!2


நம்பிதிரு மகனே!

நலலாள லலி தாவின்

அன்பின் விளைவே!

அருந்தமிழர்-இன்ப

இலக்கியமே! பாரியே!

என்றென்றும் நாட்டில்

தலைசிறந்து வாழ்க தழைத்து!3


88
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/94&oldid=1179643" இலிருந்து மீள்விக்கப்பட்டது