பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

இராக்கெட்டுகள்


பாதையில் சென்றதைக் கண்டோம். இதன்பிறகு மூன்றாண்டுகள் கழித்து இரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு மனிதனை வான வெளியில் அனுப்புவதற்குத் தயார் செய்து கொண்டிருந்தன. இதிலிருந்து புதிய அறிவியல் துறையாகிய வானவெளிப் பயணத்தில் எவ்வளவு வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றதல்லவா?

படம் B8 : எக்ஸ்புளோரர் என்ற துணைக்கோள்

புதிய உயர்ந்த வகை-எரி- பொருள்கள் (Propellents) வளரச் செய்யப்பெறுவதற்கு முன்னர் வானவெளியில் பறந்து செல்வதற்கு அமைக்கப்பெறும் இராக்கெட்டுகளின் எடை அவை சுமந்து செல்லும் ஒவ்வோர் இராத்தல் எடைக்கும் (pay-load) 1,000 இராத்தல் வீதம்