பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்வெளியில் மனிதன்

95


இருக்க வேண்டுமென்று வழக்கமாகக் கணக்கிடப்பெற்றது. இக் காரணத்தால் தான் அரும்பாடு பட்டு மிகச் சிறிய இலேசான கருவிகளை அமைத்தனர். இதனால் பிரத்தியேகமாக அமைக்கப்பெற்ற 22,600 இராத்தல் எடையுள்ள மூன்று நிலை இராக்கெட்டால் சுமந்து செல்லப் பெற்ற 21 இராத்தல் எடையுள்ள வான் கார்டு என்ற துணைக்கோளினைக்கொண்டு ஏராளமான தகவல்களைச் சேகரிக்க முடிந்தது. ஆனால், இரஷ்ய அறிவியலறிஞர்கள் தம்முடைய ஸ்புட்னிக்குகளுக்கு முதல், இரண்டாம் நிலைகளில் மிகப் பெரிய இராக்கெட்டுகளைப் பயன்படுத்தத் தீர்மானித்தனர். இதனால் வியப்பூட்டத்தக்க பருமனும் எடையும் உள்ள பெரிய துணைக்கோள்களை அயனப் பாதையில் வைப்பதற்கு அவர்களால் இயன்றது.

ஸ்புட்னிக்-1 இன் எடை 184.3 இராத்தல் என்று அறிந்தவுடன் மேனாட்டு அறிவியலறிஞர்கள் அதிர்ச்சியுற்றனர். இன்னும் ஸ்புட்னிக்-II மேலும் திகைக்கச் செய்யும் அளவிற்கு அரை டன் (1,120 இராத்தல்) எடையாக இருந்தது. 1958ஆம் யாண்டு மே மாதம் 15ஆம் நாள் அனுப்பப்பெற்ற ஃபுட்னிக்-III இன் எடை 1 டன் 6 அந்தர் (2,912 இராத்தல்) ஆக இருந்தது. இந்த எடையுள்ள துணைக்கோள் 1,300 டன் எடையுள்ள இராக்கெட்டினால் வீசி எறியப்பெற்றது என்று நம்புவது இயலாததொன்று. இதன் முன்பு 110 டன் எடையுள்ள அட்லாஸ் என்ற கண்டந்தாண்டும் உந்து ஏவுகணை (Atlas ICBM) ஒரு சிறிய சிறுவாணம்போல் காணப்பெறும். ஆகவே, இரஷ்யர்கள் மிக ஆற்றல் வாய்ந்த புதிய எரி பொருள்களைக் (Propellents) கொண்டிருத்தல் வேண்டும். மூன்றாண்டுகட்குள் இந்த எரி பொருள்கள் கிடைக்குமாறு செய்த அருஞ் செயல்கள் வியப்பிற்குரியவையாகும்.