பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

இராக்கெட்டுகள்


1958இல் அமெரிக்காவும் இரஷ்யாவும் சந்திரனைச் சுற்றி வருவதற்கேற்ற ஒரு துணைக்கோளை அனுப்பத் தீர்மானித்தன. 2,453 மைல் உயரம்வரை மேலே சென்ற வான்கார்டு-I 2,38,000 மைல் வரை சென்று சந்திரனின் துணைக்கோளாக ஏன் அமைதல் கூடாது என்று கருதுவது அளவுக்கு மீறிய பேராசை என்று சொல்லுவதற்கில்லை. பூமியின் துணைக்கோளாக அயனப் பாதையில் வைக்கப் பெறுவதற்கு மணிக்கு 18,000 மைல் வேகம் தேவையானது. இதற்குமேல் மணிக்கு 7,000 மைல் வேகம் இருந்தால் அஃது இராக்கெட்டு ‘தப்பும் நேர் வேகத்தை’ (Escape velocity) அடைவதற்குத் துணை செய்கின்றது. இது கவர்ச்சி ஆற்றலின் இழுப்பினைச் சமாளித்துச் சந்திரனை நோக்கிப் போவதற்குப் போதுமானது. இதற்குமேல் மணிக்கு 1,000 மைல் வேகம் இருந்து மொத்தத்தில் மணிக்கு 26,000 மைல் (18,000+7,000+1,000) இருந்தால், 260 இலட்சம் மைல் (26 மில்லியன் மைல்) தொலைவி லுள்ள வெள்ளி (Venus) என்ற கோளினுக்கும் செல்வதற்குச் சாத்தியப்படும்.

அமெரிக்கா 88 அடி உயரமுள்ள தோர் ஏபிள் (Thor. Able) என்ற மூன்று நிலை இராக்கெட்டினைப் பயன் படுத்திச் சந்திரனை நோக்கிச் சுட்டது. இதில் தோர் இடைநிலை எல்லை உந்து ஏவுகணையை (Thor I RB M) முதல் நிலையாகப் பயன்படுத்தியது. இதிலுள்ள சுமை (pay-load) பயனியர்-I {Pioneer-I) என்பது: இது 30 அங்குலக் குறுக்களவுள்ள தும் 85 இராத்தல் எடையுள்ள துமான ஒரு கருவிக் கொள்களனாகும்; இதில் முன்னோக்கிச் சுடப்பெறும் திட-எரிபொருள் இராக்கெட்டும் இருந்தது. இந்த இராக் கெட்டின் துணையால் பயனியர்-1 என்ற துணைக்கோள் தன்னுடைய பயணத்தின் எல்லையை அடையும்பொழுது